Search This Blog

Thursday, February 17, 2011

முடியாமல்

என்னை விட்டு சென்ற அவனை
இன்னும் காதலித்து கொண்டு தான்
இருக்கிறேன் .அவனை மறக்க முடியாமல் அல்ல ,
இன்னொருவனை நினைக்க முடியாமல்

Saturday, February 12, 2011

முதல் முறையாக நீ
என்னிடம் பேசிய
நாள் இன்னும் என்
குறிப்பேட்டில் வட்டமிட்டபடி
இருக்கின்றது .
என் காதல் என்னிடம் பேச
தொடங்கிய நாள்
பொம்மை கேட்டு அழும்
குழந்தை போல்
 உன்னை கேட்டு
 அடம் பிடிக்கிறது என் மனது

Tuesday, February 8, 2011

i like it
அன்பே
அன்பே !
உன்ன  எனக்கு ரொம்ப பிடிக்கும்  . என்ன காரணமோ தெரியாது
உன்ன நெறைய பிடிக்குது ... பாக்கணும் பேசணும் தோளில் சாயணும் 
கதை கதையா சொல்லணும் , எப்பவும் கூடவே இருக்கணும் , கை புடிச்சி நடக்கணும் ,
குட்டியான வாழ்க்கை உன் கூட வாழணும்னு ஒரே ஆசை .
ஒவ்வொரு நாளும் இதுக்காக நான் கடவுள வேண்டிக்கிறேன்
நீயும் வேண்டிக்கோ ப்ளீஸ்
விடியும் பொழுதுகள்  ஒவ்வொன்றிலும்
காத்திருக்கின்றேன் 
விடியா உன் நினைவுகளோடு ........... 

Sunday, February 6, 2011

என்னில் இதயம் என்று ஒன்று
இருக்கும் வரை
என்னிலிருந்து உன்னை
யாராலும் பிரிக்க முடியாது
ஏனெனில் என் இதயத்தின்
துடிப்பாகி விட்டாய் நீ
நீ விரும்பும் இதயம்
ஒரு நாள் உன்னை தவிக்கவிட்டு
செல்லும் போது:
நினைத்து கொள் 
உன்னை விரும்பிய  ஒரு இதயத்தை  
நீ என்றோ தவிக்க விட்டு 
இருக்கிறாய் என்று