Search This Blog

Monday, January 16, 2012

சும்மா

நம்ம தலையெழுத்துல என்ன எழுதி இருக்கோ அது தான் நடக்கும்- விதி #கல்யாணம்


நீ சொன்ன எல்லா பொய்களையும் நம்பினேனே... நான் சொல்லும் இந்த ஒரு பொய்யை நீ நம்பக்கூடாதா?


அவளும் நானும் இருக்கிறோம் ஆனால் எங்கள் காதல் இறந்துவிட்டது.


மழையில் நனையும் போதெல்லாம் ஒன்று தோன்றும்..இதே மழை எங்கேயாவது அவளையும் நனைத்துக் கொண்டிருக்கும்...


காதலும் சலிச்சிருமோ?


நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ என் வீடு வாராமல் ஏன் போகுமோ


நீ கொடுத்த கஷ்டம் கண்ணீராய் ஊற்றியது என் கண்ணில். உன்னை பார்க்கையில் மட்டும் கண்ணீரை துடைத்து மறைத்தேன்,கஷ்டம் கொடுக்ககூடாதென்று #மகானோ?


காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும் 


என்னை அறியாமல் நிலை தடுமாறுகிறேன் உன் நினைவுகள் என்னை அடிக்கையில்..


உலகத்தில் உள்ள சித்ரவதைக்கெல்லாம் செல்லப் பெயர் வைத்தால் காதல்...


உன் கைவிரல்களுக்காய் அழுகிறது என் கண்ணீர்த் துளிகள்..


விழியோரம் நீர் துளிர்க்க வைக்கின்றாய்;உன் நினைவுகளால்...


காதல் என்கிறது ஓவியம் மாதிரி, வரைய தெரிஞ்சவன் புத்திசாலி, வரைய தெரியாதவன் அதிஷ்டசாலி ;) - பார்த்து ரசிக்கிறவன் பாக்கியசாலி


Nothing's more satisfying than proving someone wrong.


உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதிவச்சேன் பாரு அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுளிருக்காது 







Thursday, October 6, 2011


Steve jobs
CEO, Apple and PIXER ANIMATION
Steve Jobs passes away |

ஸ்டீவ் ஜொப்ஸ்


அப்பிள் கணனியை கண்டு பிடித்து கணனி உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜொப்ஸ் 56 ஆவது வயதில் காலமானார்.
ஸ்டீவ் ஜொப்ஸ¤ம் அவருடைய பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்கும் இணைந்து ஆப்பிள் கணனியை கலிபோர்னியாவின் புறகர் பகுதியில் ஏப். 01. 1976 இல் உருவாக்கினர்.
அதன் பின்னர் கணனி உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. கணனி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபோர்ட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர்.
இவர் புதன் கிழமை இறந்ததாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அண்மைக்காலமாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1980ல் இவரால் உருவாக்கப்பட்ட அப்பிள் நிறுவனம் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருகிறது. ஸ்டீவ் ஜொப்ஸ் இதை தனது 21 வது வயதில் உருவாக்கினார். 1980ல் இவர் உருவாக்கிய அப்பிள் கணனி மிக வெற்றிகரமாக விளங்கியது. 2011ல் இதன் விற்பனை 4 இலட்சத்தைத் தாண்டியது. இது ஒரு உலக சாதனையாகும்.
எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணனி தொழில்நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய அப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜாபாட் மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன்ஸ் உருவாக்கியவர் இவரே.
2003இல் ஐபொட் உருவாக்கப்பட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கும் செய்து ரசித்து வருகின்றனர்.
2007ல் ஐ போனை இவர் உருவாக்கினார். ஸ்மார்ட் போன் உருவாக இது முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து முழு கணனி பயன்பாட்டை கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐபொட் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், கணனி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது. கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டெப்லட் பீசி என்ற கம்ப்யூட்டரை, ஐபொட் பின்னுக்குத் தள்ளி 2010 இறுதியில் ஒன்றரைக் கோடி விற்பனையானது.



Monday, September 26, 2011

என் முதல் திரையரங்கு அனுபவம் இது ........

...

நானும் என் தோழித்தங்கை நந்தினியும் அவளது அம்மாவும் 
ஒரு ஞாயிற்றுகிழமை மாலையில் சினிமாவுக்கு போயிருந்தோம் '
அதுதான் என் முதல் திரையரங்கு அனுபவம் என்றதால் அந்த இருட்டு 
அந்த பிரம்மாண்டம் , ஜனக்கூட்டம் , எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது 
ஆனாலும் பிடித்திருந்தது ......


நீண்ட நாட்கள் தொடர்ந்து வேலை , பயங்கர டென்சனுக்கு மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு 
தான் சினிமா போனதே ! நாங்கள் போன நேரத்துக்கே சரியாக திரைப்படமும் ஆரம்பமாகியது ,
அங்கே திரையிடப்பட்ட திரைப்படம் "எங்கேயும் எப்போதும் "
திரைப்படத்தின் ஆரம்பம் படு ஜாலியாக விறு விறுப்பாக இருந்தது .

சமீபகாலமாய் தமிழ் திரைப்படங்களை பார்ப்பதில் பெரும் சலிப்பு இருந்தது. அதுவும் மீண்டும் திரைப்பட விநியோகத்திற்காக அரை 

மணி நேரம் கூட உட்கார்ந்து பார்க்க முடியாத படங்களையெல்லாம் மீண்டும் பார்க்க வேண்டிய இம்சையில் இருக்கும் காலத்தில் 

படம் ஆரம்பித்த முதல் ஷாட்டிலிருந்து ஒர் படம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் அதனூடே பயணிக்க வைக்குமா? என்றால் ஆம்

 வைக்கும் என்று அடித்து சொல்லியிருக்கிறார்கள்.  

சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு பஸ் இரண்டும் 


விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு 

பயணிக்கும் ஜெய், அஞ்சலி, சரவ். சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணிக்கும் அனன்யா. இவர்கள் 


யார்? இந்த விபத்து இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தும் தலைகீழ் மாற்றங்கள் என்ன என்பதுதான் கதை

.


முதல் காட்சியிலேயே தூக்கி போடும் ஒரு பஸ் விபத்துடன் ஆரம்பிக்கும் படத்தில் ப்ளாஷ்பேக்குகளாய்

 நிறைய அத்யாயங்கள் திரையில் விரிந்தாலும், மெல்ல, மெல்ல அதனுள்ளே பயணிக்க வைத்ததற்கு 

காரணம் படு சுவாரஸ்யமான திரைக்கதை.  அனன்யா, சரவ் ஜோடியின் ஒரு நாள் பயணம் குட்டி

 ஹைக்கூ கவிதையென்றால். ஜெய், அஞ்சலி காதல் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் குட்டி சிறுகதைகள்

.  இவர்கள் மட்டுமில்லாமல், பஸ்ஸில் வரும் ஒரு கல்லூரி மாணவன், மாணவிக்கிடையே ஏற்படும்

 ஈர்ப்பு, பயணம் முடிவதற்கு காதலாய் மாறி நம்பர் மாற்றிக் கொள்ளும் காட்சி, புது மனைவியை பிரிய

 முடியாமல் பஸ் ஏற்ற வரும் கணவன், குட்டிப் பெண், சமையல் கார பயணி, ஜெய்யின் ஊர்கார

 பெரியவர். வெளிநாட்டில் ஐந்து வருடமாய் இருந்துவிட்டு முதல் முறையாய் தனக்கு பிறந்த 

குழந்தையை பார்ப்பதற்காக ஊர் திரும்பும் ஒரு பாசக்கார அப்ப, அவரது ரிங்டோன். அனன்யாவின் 


அக்கா, நடுவில் ஏறும் முஸ்லிம் பெண்மணி என்று மேலும் பல குட்டிக் சிறுகதைகளை மிக இயல்பாக 

கேரக்டர்களாய் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர் சரவணன். ஏற்கனவே பாடல் வெளியீட்டன்று
  
கோவிந்தா பட பாடலை பார்த்துவிட்டு மாண்டேஜில் இந்த கலக்கு கலக்கியிருக்கிறாரே என்று 

யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படத்தில் வரும் மாசமா பாட்டை தவிர எல்லா பாடல்களையும்

 மாண்டேஜிலேயே சொல்லியிருப்பது இயக்குனரில் பலத்தை காட்டுகிறது. க்ளைமாக்ஸின் போது

 அனன்யா, சரவ்வை பார்த்ததும், முகத்தில் தெரியும் ஒரு அமைதியிருக்கிறதே உருக்குகிறது. ஒரு 

நெகிழ வைக்கும் க்ளைமாக்ஸ் உடைய படத்தை படு சுவாரஸ்யமாய் திரைக்கதை அமைத்ததில்

  இயக்குனரின் உழைப்பு பளிச்சிடுகிறது. வாழ்த்துக்கள் சரவணன். உங்களால் முருகதாஸின் 

கம்பெனியில் இன்னும் நாலு புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

எங்கேயும் எப்போதும் – என்னா படம்டா..!! Don’t Miss


  

Sunday, September 25, 2011

i love you daaaaaa



எனக்குப் பிடித்த
பூக்களின்

பட்டியலில்
உன்னையும்

சேர்த்துக்கொள்கிறேன்
நான்

உனக்குப் பிடித்த
விளையாட்டு
பொம்மைகளின்

வரிசையில் என்னையும்
எழுதிக்கொள்கிறாய் நீ.

தபூ சங்கர் ....













ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது!
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே 
இருக்கிறது? என்று!"


வீட்டிற்கு 
ஒரு மரம் 
வளர்ப்பார்கள்!
உங்கள் 
வீட்டில் மட்டும் 
ஏன் 
ஒரு மயில் 
வளர்க்கிறார்கள்?


கரையில் நின்றிருந்த 
உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன 
கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் 
பறித்தே விட்டோமா
நிலவை!' என்று.

முடியவில்லை..........சலிப்பதில்லை............




































மறப்பதென்றால் 


அது முடியவில்லை.


நினைப்பதென்றால் 


மனம் சலிப்பதில்லை