அப்பிள் கணனியை கண்டு பிடித்து கணனி உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜொப்ஸ் 56 ஆவது வயதில் காலமானார்.
ஸ்டீவ் ஜொப்ஸ¤ம் அவருடைய பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்கும் இணைந்து ஆப்பிள் கணனியை கலிபோர்னியாவின் புறகர் பகுதியில் ஏப். 01. 1976 இல் உருவாக்கினர்.அதன் பின்னர் கணனி உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. கணனி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபோர்ட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர்.
இவர் புதன் கிழமை இறந்ததாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அண்மைக்காலமாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1980ல் இவரால் உருவாக்கப்பட்ட அப்பிள் நிறுவனம் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருகிறது. ஸ்டீவ் ஜொப்ஸ் இதை தனது 21 வது வயதில் உருவாக்கினார். 1980ல் இவர் உருவாக்கிய அப்பிள் கணனி மிக வெற்றிகரமாக விளங்கியது. 2011ல் இதன் விற்பனை 4 இலட்சத்தைத் தாண்டியது. இது ஒரு உலக சாதனையாகும்.
எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணனி தொழில்நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய அப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜாபாட் மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன்ஸ் உருவாக்கியவர் இவரே.
2003இல் ஐபொட் உருவாக்கப்பட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கும் செய்து ரசித்து வருகின்றனர்.
2007ல் ஐ போனை இவர் உருவாக்கினார். ஸ்மார்ட் போன் உருவாக இது முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து முழு கணனி பயன்பாட்டை கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐபொட் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், கணனி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது. கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டெப்லட் பீசி என்ற கம்ப்யூட்டரை, ஐபொட் பின்னுக்குத் தள்ளி 2010 இறுதியில் ஒன்றரைக் கோடி விற்பனையானது.
No comments:
Post a Comment