Search This Blog

Tuesday, March 29, 2011

இதுதான் காதலா?

நீ உதடு குவித்து 
உச்சரிக்கும்போது
என் உள்ளத்தில் ஆயிரம்
பூகம்பம் சிதருவதேன்?
என் ஒவ்வொரு விடியலும் உன்
ஆசை முகம் காணவே
விடிவதும் ஏன் ?
இதுதான் காதலா?  

நீ!

உணர்வுகள் என்ற நிலை
தாண்டியும் உன்னை
நான் நேசிக்கிறேன்
என்பதை எப்படி தான் நீ அறிவாய்?
என் நினைவுகளில்
நிறைவாய் நிற்பவனும் நீ!
என் கனவுகளில் கலந்தவனும் நீ!

காதல் உயில்...........

என் ஒவ்வொரு கவிதையினதும்
கதாநாயகனே !
எப்படி இருக்கிறாய்?  
எங்கே இருக்கிறாய்?
அன்றும் .........
இன்றும்.............
என்றும்..........
உன் மீதான நேசம் குறையாத      
பிரியமானவளின் 
காதல் உயில்...........  
 

Sunday, March 27, 2011

கதவுகளை திறந்து விடு ...........!

என் கிழக்கு வானம் 
கொஞ்சம் வெளுக்கத்தொடங்குகிறது 
என் இலையுதிர் காலத்திலும் 
தூரத்திலே ஒரு 
தளிர் ஒன்று துளிர் விடுகின்றது ,
என் பாலைவன காட்டிலும் 
சிறு மழை தூறல் படர்கிறது ,
அமாவாசை இரவிலும் 
ஓர் நிலவு பௌர்ணமியாகிறது
புதிய நினைவுகள் நீள்கிறது
வசந்தம் வரும் அறிகுறி
என் வாழ்க்கை காட்டில்
எங்கேயோ தூது போன
தென்றல் காற்று
என்னை கொஞ்சம் வருட வருகிறது
கதவுகளை திறந்து விடு.......
விரிந்து கிடக்கும் கதவுகளை
வான் வெளியில்
தொட்டுவிட நினைக்கும்
என் இளமைக்கு
முட்டுக்கட்டை போடாதீர்கள்
தட்டிக்கொடுக்கும் போர்வையில்
குட்டும் சமூகம்
தடைகளையே கண்டும்
தடுமாறாத இதயத்தோடும்
சலனங்களை சந்தித்தும்
சளைக்காத உள்ளத்தோடும்
சாதிக்கத்துடிக்கின்றேன்
கதவுகளை திறந்து விடு
என் பாதங்கள் பயணிக்க,,,
காயப்பட வேண்டுமேன்பதட்காகவே
முட்களோடு ரோஜாக்களையும்
வாழ்த்துக்களோடு வக்கிரத்தையும்
சேர்த்து கொடுக்கும்
பொல்லாத உலகம்
இந்த வாழ்க்கை எனக்கு
உடன்பாடில்லை
அமாவாசை இருட்டுக்குள்
குருட்டு குடித்தனம் தேவையில்லை
சூரியன் வேண்டாம்
தன்னியம் பாராது
மின்னொளி வீசும்
மின்மினி போதும்
என் இமைகளுக்குள் தூங்கும்
கனவுகளுக்கு வெளிச்சம் கொடுக்க
விரைந்து விட்டேன்
கதவுகளை திறந்து விடு .............!
எப்போதோ தீண்டிய
சந்தோஷ கீறல்கள்
என்னுள் எழும் போதெல்லாம்
இனம் புரியாத ஒரு உற்சாகம்
என்னை கட்டிபோடுகிறது
கைகள் இறக்கை பூட்டி கொள்கிறது
தட்டி தட்டியும் திறக்காத கதவு
தேடி தேடியும் கிடைக்காத பொருள்
கேட்டு கேட்டும்
கொடுக்கப்படாத வாழ்க்கை
நடை பழகும் குழந்தையாய் விழுகிறேன்
எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன்
இன்னும் நான் முழுமையாய் வாழவில்லை
வாழ்ந்தும் வாழப்படாத ஒரு பகுதி
இன்னும் இருக்கிறது
வாழ்க்கை என்னை அழைக்கிறது
கதவுகளை திறந்து விடு .............!
சுதந்திரமாக பறக்க வேண்டும்
என்பதற்காகவே
சிறகு கொண்டு வருகிறேன் -என்
சிறைகளை கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள்
தடைகள் எனும் திறப்பு கொண்டு
தகர்த்தெறியுங்கள்
காலக்கல்வெட்டில் 
என் பெயரை பொன்னெழுத்தில் பொறித்திட
வழி விடுங்கள்
நான் காட்டாறு 
அணைகட்ட முடியாது ,
உயர உயர பறந்து கொண்டேயிருக்கும் 
கழுகின் வம்சம் நான்
காத்திருக்கிறேன் 
கதவுகளை திறந்து விடு ...........!  

Saturday, March 26, 2011

இன்னும்

என்னருகில்
நீ அமர்ந்து
பேசிடும் போது
எனக்கு இன்னும்
ஓர் ஜென்மம் தேவை படுகிறது

மட்டும் சாத்தியம்

இருமலும் தும்மலும்
கூட கவிதைகளாவது
காதலில் மட்டும் சாத்தியம்
என் பார்வைகளில்
நீ படுகின்ற போதெல்லாம்
எதோ ஒன்றை என் பேனா
கிறுக்கி கொள்கின்றது நாளேட்டில்...........

மயிலிறகாய்..................

உன் தலையிலிருந்து விழும்
ஒவ்வொரு மயிரினையும்
புத்தக இடுக்கில்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
மயிலிறகாய் ................
மயிலிறகாய்..................

உனக்கான என் கவிதை

நான் எழுதிய எத்தனையோ கவிதைகளை
உன்னிடம் காட்டி ,
ரசித்திருக்கிறேன்
ஆனால் ,
உனக்கான என்  கவிதைகளும் உள்ளேயே 
இருக்கிறது உனக்கு தெரியாமல் .

Saturday, March 19, 2011

குழந்தைகள்







எனக்கு பிடித்த குழந்தை செல்லகுட்டிகள்

Friday, March 18, 2011

பிரிவு காலத்தின் கையில் ஒரு பிரம்பு
அது தான் காதலுக்கு அடித்து அடித்து அர்த்தம்
சொல்கிறது

Tuesday, March 15, 2011

இதயமே !

கண்ணீரை காணிக்கயாக்கும் காதல் இதயமே
காத்திருத்தல் உன் காதலோடு என்றால்
இன்று மட்டும் அல்ல ,என்றுமே காட்சி பொருளாக
உன் கைகளில் இருப்பேன்
கலங்காதே என் இதயமே !