...
நானும் என் தோழித்தங்கை நந்தினியும் அவளது அம்மாவும்
ஒரு ஞாயிற்றுகிழமை மாலையில் சினிமாவுக்கு போயிருந்தோம் '
அதுதான் என் முதல் திரையரங்கு அனுபவம் என்றதால் அந்த இருட்டு அந்த பிரம்மாண்டம் , ஜனக்கூட்டம் , எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது
ஆனாலும் பிடித்திருந்தது ......
நீண்ட நாட்கள் தொடர்ந்து வேலை , பயங்கர டென்சனுக்கு மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு
தான் சினிமா போனதே ! நாங்கள் போன நேரத்துக்கே சரியாக திரைப்படமும் ஆரம்பமாகியது ,
அங்கே திரையிடப்பட்ட திரைப்படம் "எங்கேயும் எப்போதும் "
திரைப்படத்தின் ஆரம்பம் படு ஜாலியாக விறு விறுப்பாக இருந்தது .
சமீபகாலமாய் தமிழ் திரைப்படங்களை பார்ப்பதில் பெரும் சலிப்பு இருந்தது. அதுவும் மீண்டும் திரைப்பட விநியோகத்திற்காக அரை
மணி நேரம் கூட உட்கார்ந்து பார்க்க முடியாத படங்களையெல்லாம் மீண்டும் பார்க்க வேண்டிய இம்சையில் இருக்கும் காலத்தில்
படம் ஆரம்பித்த முதல் ஷாட்டிலிருந்து ஒர் படம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் அதனூடே பயணிக்க வைக்குமா? என்றால் ஆம்
வைக்கும் என்று அடித்து சொல்லியிருக்கிறார்கள்.
சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு பஸ் இரண்டும்
விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு
பயணிக்கும் ஜெய், அஞ்சலி, சரவ். சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணிக்கும் அனன்யா. இவர்கள்
யார்? இந்த விபத்து இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தும் தலைகீழ் மாற்றங்கள் என்ன என்பதுதான் கதை
.
முதல் காட்சியிலேயே தூக்கி போடும் ஒரு பஸ் விபத்துடன் ஆரம்பிக்கும் படத்தில் ப்ளாஷ்பேக்குகளாய்
நிறைய அத்யாயங்கள் திரையில் விரிந்தாலும், மெல்ல, மெல்ல அதனுள்ளே பயணிக்க வைத்ததற்கு
காரணம் படு சுவாரஸ்யமான திரைக்கதை. அனன்யா, சரவ் ஜோடியின் ஒரு நாள் பயணம் குட்டி
ஹைக்கூ கவிதையென்றால். ஜெய், அஞ்சலி காதல் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் குட்டி சிறுகதைகள்
. இவர்கள் மட்டுமில்லாமல், பஸ்ஸில் வரும் ஒரு கல்லூரி மாணவன், மாணவிக்கிடையே ஏற்படும்
ஈர்ப்பு, பயணம் முடிவதற்கு காதலாய் மாறி நம்பர் மாற்றிக் கொள்ளும் காட்சி, புது மனைவியை பிரிய
முடியாமல் பஸ் ஏற்ற வரும் கணவன், குட்டிப் பெண், சமையல் கார பயணி, ஜெய்யின் ஊர்கார
பெரியவர். வெளிநாட்டில் ஐந்து வருடமாய் இருந்துவிட்டு முதல் முறையாய் தனக்கு பிறந்த
குழந்தையை பார்ப்பதற்காக ஊர் திரும்பும் ஒரு பாசக்கார அப்ப, அவரது ரிங்டோன். அனன்யாவின்
அக்கா, நடுவில் ஏறும் முஸ்லிம் பெண்மணி என்று மேலும் பல குட்டிக் சிறுகதைகளை மிக இயல்பாக
கேரக்டர்களாய் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர் சரவணன். ஏற்கனவே பாடல் வெளியீட்டன்று
கோவிந்தா பட பாடலை பார்த்துவிட்டு மாண்டேஜில் இந்த கலக்கு கலக்கியிருக்கிறாரே என்று
யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படத்தில் வரும் மாசமா பாட்டை தவிர எல்லா பாடல்களையும்
மாண்டேஜிலேயே சொல்லியிருப்பது இயக்குனரில் பலத்தை காட்டுகிறது. க்ளைமாக்ஸின் போது
அனன்யா, சரவ்வை பார்த்ததும், முகத்தில் தெரியும் ஒரு அமைதியிருக்கிறதே உருக்குகிறது. ஒரு
நெகிழ வைக்கும் க்ளைமாக்ஸ் உடைய படத்தை படு சுவாரஸ்யமாய் திரைக்கதை அமைத்ததில்
இயக்குனரின் உழைப்பு பளிச்சிடுகிறது. வாழ்த்துக்கள் சரவணன். உங்களால் முருகதாஸின்
கம்பெனியில் இன்னும் நாலு புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
எங்கேயும் எப்போதும் – என்னா படம்டா..!! Don’t Miss