
தெரிந்தோ தெரியாமலோ, முடிந்தோ முடியாமலோ,
சாலையோரம் நின்று பிச்சைக்கேட்கும் முதல் சிறுவனோ, முதல் மூதாட்டியோ மட்டுமே என்னிடம் இருந்து கருணை பெறமுடிகிறது,அதற்கு பிறகுவரும் அணைத்து உதவிகேட்போருக்கும் நானும் இரக்கமற்றவள் தான்....
எங்கே உண்கிறார்கள், எங்கே உறங்குகிறார்கள் என்ற இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு விடை தேடதோன்றும்,ஆனால் விடை தேட முயற்சித்ததில்லை,நான் கொடுக்கும் ஒரு ரூபாய் நிச்சயம் இதற்கு ஒரு தீர்வாய் இருக்காது, இவர்களுக்கான ஒரு முழுமையான தீர்வை நான் கொடுக்கும்வரை
நானும் இரக்கமற்றவள் தான் ..........
No comments:
Post a Comment