Search This Blog

Sunday, September 18, 2011

you..............


**இனிமேல் கவிதை எழுத போவதில்லை
நீ பேசு... நான் கேட்கிறேன்...!



சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் எவ்வளவு தூரம்?
நீ அருகில் இருப்பதற்கும், தொலைவில் இருப்பதற்கும் உள்ள தூரம் தான்!



கனவுக்கும் நனவுக்கும் மற்றுமொரு வித்தியாசம்
கனவில் நாம் காதலிக்கிறோம்...
நனவில் நான் காதலிக்கிறேன்...!


உறங்கினால்
உன் மடியிலே உறங்க வேண்டும் ! இல்லையனில் உன் மடியில் இறக்கவேன்டும்



 துடிப்பதை விட உன்னை நினைப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது என் இதயத்திற்கு

"..உன் கனவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா...நீயும் நானும் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது 'பேசியது போதும் வா வீட்டுக்குப் போகலாம்' என்று ஓரமாய் நின்று உன் குடும்பமே கெஞ்சிக் கொண்டிருந்ததே அந்தக் கனவுதான்.."


கனவில் நீ என்னை ஆயிரங்கால் மண்டபத்திற்கு வரச் சொன்னதன் காரணம் வேலைப்பாடுகள் நிறைந்த அந்த ஆயிரம் கால்களை விட உன் கால்களே அழகென்பதை எனக்கு காட்டத்தானே..!’


..என் படுக்கையில் உனக்கு இடம் விட்டுத்தான் எப்பொழுதும் உறங்குகிறேன்…. கனவில் வந்து நீ படுத்துக்கொள்ள..!!




 இன்று காதலர்தினம்.எல்லா காதலரும் ரோஜாத் தோட்டத்தில் பூப்பறித்துக்கொண்டிருக்கிறார்கள். நான்
தோட்டத்தின் வெளியே நின்று கொண்டிருக்கிறேன்.எல்லோரும் பூப்பறித்துச் சென்ற பிறகு தோட்டத்துக்குள் செல்வேன்.காதலுக்காக பூக்களையெல்லாம் பரிசளித்துவிட்டு காம்புகளோடு நிற்கும் ரோஜாச்செடிகளோடு பரிமாறிக்கொள்வேன், உனக்கான என் காதலை!


நீ தொடுகிற பூக்களையெல்லாம் என்னால்
தொட முடிந்ததே இல்லை. நீ தொட்டது
எப்படி எனக்குத் தெரியும் என்கிறாயா. உன்
விரல்களைத்தான் பூக்கள் அப்படியே
வைத்திருக்கின்றனவே. 



 அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய். 






No comments:

Post a Comment