Search This Blog

Friday, April 15, 2011

என்னை சுற்றி எத்தனையோ 
சம்பவங்கள் நிகழ்ந்தாலும் 
எனக்கு உன் நினைவுகள் 
இல்லாமல் இருக்கவே 
முடிவதில்லை ....
இது என்ன 
கோழைத்தனமென என்னை நானே 
திட்டியும் பயனேதுமில்லை 
முன்பெல்லாம் உன்னிடம் பேச தயங்கும் 
நான் இப்போது உன் அழைப்புக்காகவே
காத்திருக்கிறேன் 
என்ன ஆனாலும் என் உள்ளத்தை 
உன்னிடம் கூறவே முடியாது 
ஆத்மார்த்தமான  அன்பை 
பாசத்தை  அக்கறையை 
காதல் என்னும் தூக்கில் போட
சம்மதிக்கவே முடியாது .........
நீ கூறினால் மட்டும் உண்டு 
கனவுகளிலாவது 
நீ வர மாட்டாயா? 
எதுவும் பேச மாட்டாயா 
என தினமும் ஏங்கிக்கொண்டிருக்கிறேன் 
வேண்டாம் 
பருவம் ,வயது , என்னை ஆக்கிரமித்தாலும் 
நாம் சேர்ந்து 
வாழ முடியாது................



Thursday, April 7, 2011

நீ தின்று மீதி தந்த
ஐஸ் கிரீம்
நீ துடைத்த கைக்குட்டை
உன் பெயர் தாங்கிய
காகிதம்
நீ எழுதி விட்டு தந்த பேனை
நீ பேசும் போது,
கடிக்கும் நகங்கள்
உன் சுவாசம் தாங்கிய
பலூன்
நீ புன்னகைக்கும் படம்
இப்படி குட்டி குட்டி
பொக்கிஷங்கள் நம் காதல்
சின்னமாய் என்னிடமுண்டு
அன்பே !
உன்னை தவிர
உனக்காக உயிரை விட்டு விட
துணிந்தாலும்
என்னுயிர் நீ என்று சொன்னாயே !!
என்னுயிர் போனால்
உன்னுயிர் போய்விடுமோ?
பயமாயிருக்குதடா............
உன் நினைவு இருக்கும் என் இதயத்தை
கழற்றி எரியச்சொல்கிறாய்
என் இதயத்தில்
நினைவாக நீயிருந்தால்
பரவாயில்லை
இதயமாகவே இருக்கிறாய் நீ !
எப்படி என்னால் எறிய முடியும்,?
உன்னை மறந்தது போல் நடிக்கத்தான் முடியும்
நிஜத்தில் முடியாதடா...........
என் காயங்கள் உன்னை கண்ணீர் சிந்த விடும் என
நம்பி என்
எத்தனையோ துயரங்களை
உன்னிடம் சொல்லவில்லை
காதலை சாதலாக்க எனக்கும் தெரியாது........
என்னவனுக்கு தெரியும் என்றும் எனக்கு தெரியாது
காதலை பூஜிக்க தெரியும்
உன்னை போல் புதைக்க தெரியாது ....
நம் காதல் உண்மை என்றால்
என் கல்லறையிலாவது வந்து எழுதி செல்
உன் பெயரை என் ஆத்ம சாந்திக்காக அல்ல ,
நம் காதலின் ஆத்மார்த்தமான காதலின் சாட்சிக்காக .........

Saturday, April 2, 2011


சொல் அன்பே

பக்கத்து வீட்டு நாய் குட்டியாய்
ஏன் இதயமும்
உன் பின்னே
ஓடி ஓடி வருகிறது
உன் தோள்   மீது
ஊரும் எறும்பு நானாகவா?
நீ செல்லும்
பாதையெல்லாம்
பூவாகவா?
நீ குளிர்காய எரிந்து
விறகாகவா?

ஏன் தூர நின்று சிரிக்கிறாய் ?

என் தனிமைகளை ஏன்
கொல்கிறாய்?
காகிதங்களை உன் பெயரால்
நிரப்பினாய்
ஏன் உயிரை
கயிற்றால் கட்டினாய்
எல்லாம் செய்து விட்டு
பின்பு ஏன் தூர நின்று
சிரிக்கிறாய் ?

என்ன தவம் செய்தேனோ?

உன்னை வரமாய் பெற
எந்த ஜென்மத்தில்
என்ன தவம் செய்தேனோ?

எப்படி என்னால் மறக்க முடியும் ?

என் இதயத்தை காதல் என்ற பெயரில்
களவாடி சென்ற
உன்னை
எப்படி என்னால் மறக்க முடியும் ?

ரொம்ப பிடிக்கிறது ........

தூரத்தில் இருக்கும் உன்னை
அருகில் காட்டுவதால்
என் கண்ணாடியை
எனக்கு ரொம்ப பிடிக்கிறது ........
இத்தனை நாளாக
தேடிய உன் முகவரி
வீடு தேடி வந்தது
உன் திருமண அழைப்பிதழில்

தேடினேன்

இத்தனை நாளாக
தேடிய உன் முகவரி
வீடு தேடி வந்தது
உன் திருமண அழைப்பிதழில்
ஒரே ஒரு முறை மட்டும்
இறந்து பார்க்க ஆசை ,
எனக்காக அழும் இதயங்களை அறிய

நீதானே!

என் மரணத்துக்கு இரண்டு நிமிட
மௌன அஞ்சலி நீ செலுத்துகிறாய்
என் மரணத்துக்கு காரணமே
நீதானே!

உன் தோள்களில் சாயும் வரமொன்று கிடைத்தால் மரணத்தை கூட நான் வரவேற்பேன்

உன் தோள்களில் சாயும் வரமொன்று
கிடைத்தால்
மரணத்தை கூட
நான் வரவேற்பேன்
வேண்டாமென்று பல விடயங்களை 
ஒதுக்கி விட்டேன்
வேண்டுமென்ற உன் ஒருவனுக்காக