Search This Blog

Thursday, July 7, 2011

காதல்…!

பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையில்
வாழ்வின் சில குறியீடுகளாக
காதல்…!
தொலைவாகிப்போகும்
புள்ளிகளாக…
ஒரு விளிம்பில் நான்
மறுவிளிம்பில் அவள்
காலங்கள்
கனவாய்ப் போனபின்
நெருப்பில் நின்றுகூட
நீ…
அழக்கூடும்…!
கண்ணீரைப்போலவே
காதலும்
கணத்தின்பாதியில்
உன்…
கண்முன்னே கருகக்கூடும்…!
ஒரு இனந்தெரியாத இராகம்
நரம்புகளில் வீணைமீட்ட
ஒரு மர்மசோகம்
ஓடிவந்து மனசைத்தாக்க
அப்போது…
யார் அழுவார் – உன்
நெஞ்சின் சோகம் தீர்க்க…???
பூக்களுக்கும் முட்களுக்கும்
இடையில்…
சிறியதூரம்தான்
சில சமயங்களில்…
முட்களின் தூரம்வரைத்தான்
உன்னால் பயணிக்கமுடியும்
காயங்களுக்கு நடுவில்
பிரிவுகளும்…
சிலநேரம் வசப்படலாம்
யாருடைய பிரிவையும்
யாராலும் தடுக்கமுடியாத நிலையில்…!!!
 

ஆசைப்படுகின்றேன்

அன்பாக அரவணைக்கும்
உன் தோள்களிலே
தலை சாய்த்து
உன் மார்பு சூட்டில்
குளிர் காய்ந்து
உன் மடி மீது 
முகம் புதைத்து
வாழப்போகும்
அந்நாட்கள் தரும்
இன்பத்தை……
சொர்க்கத்தை……
இன்னொரு ஜென்மம் எடுப்பினும்
தரமுடியுமா
இவர்களால் எனக்கு?
உன்னாலே உயிர் பெற்றேன்
உன்னாலே உணர்வுகளை
சுவாசிக்கின்றேன்
உனை பிரிவதனிலும்
பிரிவது என் உயிராயிருக்க
ஆசைப்படுகின்றேன்
அன்பனே
அன்பானவனே
அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!
என் ஒவ்வொரு நாளையும்
உனக்காய் உனக்காய்
மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன்
நீ எனக்குள் வாழ்வதால்!
உனை சிந்திக்க மறந்தால்
என் இதயம்
சின்னாபின்னம்தான்
உயிர்ப்பதாயினும்
உனக்காய் உயிர்க்கவே
ஆசைப்படுகின்றேன்
உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்
என்னவனே எனக்குள்ளேயே
தொலைந்துவிடு
என் இறுதிவரை!

வெட்கத்தோடு

இந்த குளிர் காற்றினில் சிக்கிக் கொண்டு
நடுங்குது என் உள்ளம்…
என்னவன் மட்டும் என் அருகே வந்து
கட்டி அணைத்து  இமைகளை மூடி
என் இதழ்களை கொஞ்சம் கடித்து கொஞ்சம் சுவைத்து
உள்ளுக்குள் சிரித்து
 வெட்கத்தோடு ஒரு முத்தம் தந்தால்
இந்த குளிர் காற்று கூட
தலை சுற்றி வியர்ந்து போய்
அவன்  முத்தங்களுக்கு பணிந்து போய் விடும்…
ஏன் தெரியுமா?
கல்லாக இருந்த என் மனத்தை கூட
கரைத்த அந்த முத்தங்களுக்கு முன்
இந்த குளிர் காற்று நிலைத்து நிற்குமா???

அன்பே

திரும்பும் திசையெல்லாம் 
உன் முகம்தான் 
திருட்டுப் பயலே நீ யாரடா? 
திட்டி வெறுக்க முடியவில்லை 
நெஞ்சில் புகுந்தவன் தானடா 
செல்லமே உன் பெயர் வெல்லமடா 
அதை நினைத்து 
துள்ளல் கொள்கிறது என் உள்ளமடா..

நீ மட்டும்

என்றோ ஒரு நாள்
மறந்த கவிதை அதை இன்று ...
நினைத்திருக்கவே கூடாத கவிதை.
எழுத நினைக்கையில் நிச்சயம்
எழுத்துப் பிழைகளாகவே
வரும் கவிதை
இருந்தும் இப்போது
எழுத தூண்டும் கவிதை
இதில் எது நடந்திருக்க வேண்டாம்
அல்லது எது நடந்திருக்க வேண்டும்..?