Search This Blog

Thursday, July 7, 2011

காதல்…!

பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையில்
வாழ்வின் சில குறியீடுகளாக
காதல்…!
தொலைவாகிப்போகும்
புள்ளிகளாக…
ஒரு விளிம்பில் நான்
மறுவிளிம்பில் அவள்
காலங்கள்
கனவாய்ப் போனபின்
நெருப்பில் நின்றுகூட
நீ…
அழக்கூடும்…!
கண்ணீரைப்போலவே
காதலும்
கணத்தின்பாதியில்
உன்…
கண்முன்னே கருகக்கூடும்…!
ஒரு இனந்தெரியாத இராகம்
நரம்புகளில் வீணைமீட்ட
ஒரு மர்மசோகம்
ஓடிவந்து மனசைத்தாக்க
அப்போது…
யார் அழுவார் – உன்
நெஞ்சின் சோகம் தீர்க்க…???
பூக்களுக்கும் முட்களுக்கும்
இடையில்…
சிறியதூரம்தான்
சில சமயங்களில்…
முட்களின் தூரம்வரைத்தான்
உன்னால் பயணிக்கமுடியும்
காயங்களுக்கு நடுவில்
பிரிவுகளும்…
சிலநேரம் வசப்படலாம்
யாருடைய பிரிவையும்
யாராலும் தடுக்கமுடியாத நிலையில்…!!!
 

No comments:

Post a Comment