நினைவுகளில் சிந்திடும் கண்ணீர்த்துளி பிடிக்கும்
தனிமையின் நினைவுகள் பிடிக்கும்
கோபங்களை புன்னகையில் வென்றிட பிடிக்கும்
புரிந்து கொண்டு விட்டு கொடுப்பது பிடிக்கும்
முயற்சிகளை விடாது முயற்சிப்பது பிடிக்கும்
வாழ்வில் சின்ன சின்னதாய் மாற்றங்கள் பிடிக்கும்
செய்கின்றவைகளை நேர்த்தியாய் செய்திட பிடிக்கும்
சுத்தம் பிடிக்கும் (MANASU)
தொலைதூர பயணங்கள் பிடிக்கும்
பயணத்தின் போது இசை கேட்டிட பிடிக்கும்
பூவிதழில் உள்ள பனித்துளி பிடிக்கும்
பட்டாம் பூச்சியின் படபடப்பு பிடிக்கும்
முழு நிலவொளியில் படகு பயணம் பிடிக்கும்
மின்சாரமில்லா இரவில் மெழுகுவர்த்தியின் ஒளி பிடிக்கும்
கரை மணலில் அமர்ந்து கடலலைகள் ரசிக்க பிடிக்கும்
ஜில்லென்ற மழையில் நனைய பிடிக்கும்
விதவிதமாய் புகைப்படம் எடுக்க பிடிக்கும்
எடுத்ததை திரும்ப திரும்ப பார்க்க பிடிக்கும்
கவிதைகள் பிடிக்கும்
மனம் விரும்புவதை எழுதிட பிடிக்கும்
தூக்கத்தில் கனவுகள் பிடிக்கும்
பல சமயங்களில் குழந்தையாய் மாறிட பிடிக்கும்
மழழையின் மொழி பிடிக்கும்
காதலுடன் இதழ்கள் இணையும் முத்தம் பிடிக்கும்
அதிகாலை காதல் பிடிக்கும்
மௌனம் ரொம்ப பிடிக்கும்
அதிர்ந்து பேசாத வார்த்தைகள் பிடிக்கும்
இதழ் பிரியாத புன்னகை பிஒடிக்கும்
புன்னகையில் மறைந்திருக்கும் நிஜமான நேசம் பிடிக்கும்
கண்களை நேராக பார்த்து பேச பிடிக்கும்
பேசுவதே கண்களில் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
என் அன்பிற்கினிய வாசக நெஞ்சங்களே நான் நிஜமாக நேசிக்கும் எனக்கு ரொம்ப பிடித்த
விஷயங்களை மட்டும் தான் இங்கே பதிவிட போகிறேன் . உங்களுக்கு பிடித்திருந்தால் படியுங்கள் பிடிக்காவிட்டால் விமர்சியுங்கள் இப்படிக்கு அன்புடன் தோழி .........
No comments:
Post a Comment