என்னுடைய நாட்கள் ஒவ்வொன்றுமே அதிகாலை மூன்று மணிக்கே ஆரம்பித்து விடும்
அதிகாலை ஐந்து மணிக்கே அலுவலகம் செல்வதால் தான் நேரத்தோடு எழும்ப வேண்டும் ,
தனிமை வாழ்க்கை , நண்பர்களும் ரொம்ப குறைவு , இதனால் நானும் அலுவலகமும் என்று
வாழ்வின் ஒரு பாதி கடந்துகொண்டிருக்கிறது ................
இப்படித்தான் சில நேரங்களில் கொஞ்சம் நேரத்தோடு வீட்டுக்கு வந்து விடுவேன் ,
அந்த நேரங்களில் அதிகமாக கட்டில் மட்டும் தான் என் தஞ்சம்
தூக்கத்துக்காக ஏங்கிய நாட்கள் அவை , சந்தர்ப்பங்களில் கீழ் வீட்டு ஆண்ட்டியோடும் குழந்தைகளோடும்
என் நிமிஷங்கள் சந்தோஷமாகவும் , சங்கடமாகவும் கழியும்
அன்றொரு நாள் என் வீட்டுக்கு கீழ் வீட்டு ஆண்ட்டியின் உறவினர்கள் வந்திருந்தனர்
அவர்களோடு வந்த சில சின்னஞ்சிறுசுகள் என்னை தேடி வந்திருக்கின்றனர் ,
நானோ ஆழ்ந்த நித்திரை
வீட்டுக்கு பின்னால் முனுமுனுக்கும் சத்தம் ..........
என் செவியை நான் அந்த பக்கம் சாய்த்தேன் அவர்களின் உரையாடல் இப்படி அமைந்தது ,
"இந்த வீட்டில சக்தி fm ல work பண்ணுற ஒரு ஆண்ட்டி இருக்காங்களாம் "அதிகாலை ஐந்து மணிக்கே அலுவலகம் செல்வதால் தான் நேரத்தோடு எழும்ப வேண்டும் ,
தனிமை வாழ்க்கை , நண்பர்களும் ரொம்ப குறைவு , இதனால் நானும் அலுவலகமும் என்று
வாழ்வின் ஒரு பாதி கடந்துகொண்டிருக்கிறது ................
இப்படித்தான் சில நேரங்களில் கொஞ்சம் நேரத்தோடு வீட்டுக்கு வந்து விடுவேன் ,
அந்த நேரங்களில் அதிகமாக கட்டில் மட்டும் தான் என் தஞ்சம்
தூக்கத்துக்காக ஏங்கிய நாட்கள் அவை , சந்தர்ப்பங்களில் கீழ் வீட்டு ஆண்ட்டியோடும் குழந்தைகளோடும்
என் நிமிஷங்கள் சந்தோஷமாகவும் , சங்கடமாகவும் கழியும்
அன்றொரு நாள் என் வீட்டுக்கு கீழ் வீட்டு ஆண்ட்டியின் உறவினர்கள் வந்திருந்தனர்
அவர்களோடு வந்த சில சின்னஞ்சிறுசுகள் என்னை தேடி வந்திருக்கின்றனர் ,
நானோ ஆழ்ந்த நித்திரை
வீட்டுக்கு பின்னால் முனுமுனுக்கும் சத்தம் ..........
என் செவியை நான் அந்த பக்கம் சாய்த்தேன் அவர்களின் உரையாடல் இப்படி அமைந்தது ,
அவங்க கட கடன்னு கதைப்பாங்கலாம், ரேடியோல பாட்டெல்லாம் போடுவாங்களாம் , "
இன்னொரு வால் சொல்லுது " அவங்க ஆண்ட்டி இல்ல " அதுக்கு மற்ற வால் கேட்குது " எப்படி சொல்ற? "
எனக்கும் அந்த மழழை செல்வங்களோடு கொஞ்சம் பேச மனம் தூண்டினாலும் சோம்பல் தடுக்கிறது
" அந்த அக்கா கருப்பா இருப்பாங்களா? இல்ல வெள்ளையா இருப்பாங்களா?
கதவ தட்டுவோமா?
திடீர்னு ஒரு வால் எதோ செய்துருக்கு போல மற்ற வால் அந்தா அந்த அக்கா வாரா ........................!
என்று சொல்ல , அதில் இன்னொரு வால்
""அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே !!"
என்று கன கம்பீரமாய் பாடுது ............
அத கேட்டு அசந்தே போய்டேன் .. இந்த காலத்து பசங்களும் அவங்க
கதையும் ............ சூப்பர்

No comments:
Post a Comment