பெண்கள் பேச வேண்டும்
சில நூற்றாண்டுகளுக்கு முன்
தோன்றிய கவிஞர்கள் எல்லாம்
பெண்ணியம் பற்றி பாடினார்கள்
பெண்களின் அழகு , அறிவு , வீரம்
கற்பு என்று ஒவ்வொன்றாய்
அணு அணுவாய் ரசித்து
புகழ்ந்தார்கள் ...............
ஆனால் எப்போதும் இவர்களின்
கவிதையின் கருவில் எனக்கொரு
உறுத்தல் இருக்கிறது !!
தன் ஒற்றைக்கால் சிலம்பால்
கணவன் கோவலனுக்காய் மதுராபுரியை
எரித்த கற்புக்கரசி கண்ணகி ;
எதிர்த்து வந்தவன் அவதாரம் என்றபோதும்
எதிர்த்து நிற்பதே தமிழர் வீரம்
என்று நின்ற தமிழ்தேவி மண்டோதரி
தன் வாழ்நாளில் பாதியை
தமிழுக்காய் தாரைவார்த்த
ஒளவையார்...;
பிறந்த குளம் தாழ்வென்ற போதும் -தன்
கற்புநெறி பிறழாத மங்கை மாதவி
காதலின் ஜோதியாய் இன்றும்
சுடர்விடும் அமராவதி
அறுபத்துமூன்று நாயன்மாருள்
பக்திபரவசத்துக்கு சான்றாய் விளங்கிய
பெண் காரைக்காலம்மையார் ;
பொறுமையின் சிகரம் சீதை
இப்படி வரலாறுகளும் இதிகாசங்களும்
பெண்கள் பற்றி புகழ்ந்து சொன்னதை
நான் தப்பென்று சொல்லவில்லை ;
ஆனால் -இந்த இதிகாசங்களும் வரலாறுகளும்
வரைவிலக்கணம் வகுத்த பெண்டிரை
யாரும் பார்த்ததில்லையே ! -அவர்கள்
வாழ்ந்த காலத்தின் சுவடுகள் கூட
இன்றில்லையே !! - அவை வெறும்
கற்பனையாக கூட இருக்கலாம்!!
ஆனால் இன்று நம் கண் பார்க்க
காத்து கேட்க ; புலன் உணர ;
உலகின் மூளை முடுக்குகளிலெல்லாம்
பெண்கள் பேசிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்
எல்லோர் வீடுகளிலும் குல விளக்காய்
ஒரு பெண் இருக்கின்றாள்
இவர்களை விடுத்து ஏன்
மரபை பாட வேண்டும்?
எந்நேரமும் எக்காலமும்
காலை மாலை மதியம் இரவு
நடுநிசி என காலத்தை கடந்து
ரசிக்ககூடிய ஒரே அழகு
பெண்ணழகு மட்டும்தான் ;
ஏன் இந்த ஆண்கள் தங்கள்
மனைவியை , காதலியை விடுத்து
பழமை போற்றிக்கொன்டிருக்கிறார்கள் ?
இந்த நவநாகரிக போதை உலகில்
தெரியாத , புரியாத , நிச்சயமாய் தெரியாத
ஒரு மாயைக்கு பூஜை செய்வதில்
எனக்கு உடன்பாடில்லை
இயற்கை சாம்ராஜ்யமாய்
அழகின் விஸ்வரூபமாய் ;
ஒரு தாய் , சகோதரி , காதலி , மனைவி
ஏன் ஆருயிர் தோழி ;
தாதியர் ஆசிரியைகள்
இசையால் உலகாளும் பாடகிகள் என
நம்மை சுற்றி வட்டமிடும் இந்த
பெண்கள் மட்டும் எப்படி மறைந்தார்கள் ?
இன்றைய நங்கையர் காவிரி கங்கை போன்றவர்
ஒவ்வொரு பெண்ணும் உலகுக்கு
உயிரை உற்பத்தி செய்கின்றனர்
சிறந்த முகாமைத்துவத்துக்கு
முதலுதாரணமே இந்த பெண்தான்
ஒவ்வொரு பெண்ணும் ஒரு நூல்கள்
ஒவ்வொரு பெண்ணும் பாடசாலைகள் ;
மனிதன் ஏனோ கற்றுக்கொள்ள மட்டும் மறந்து போகிறான் !!
பெண்மை என்பது ரகசியம்
பெண்மை என்பது அதிசயம்
இன்னும் நூறாண்டுக்கு பின்னரும்
இந்த பூமி சுற்றும்
இன்னும் நூறாண்டுக்கு பின்னரும்
காற்று வீசும் - அன்றும் இன்று போல்
சீதை , கண்ணகி , மாதவி புகழ்தான் பாடப்போகின்றார்களா?
வேண்டாம் வேண்டவே வேண்டாம் .......:
ஒன்று சொல்கிறேன் - இன்னும்
பெண்கள் பேசுகின்றனர் -ஏன்
எனக்காய் சுவாசித்து கொண்டிருக்கும்
என் அன்னை செல்வராணி !
உங்கள் முன் நிற்கும் நான் !!
இந்த உலகில் இருக்கும் கோடான கோடி பெண்களும்
பேசுகின்றனர் பேச வேண்டும் ...............
இவற்றை மறந்து இதிகாசகால
பெண்களும் கொடிபிடிக்கும்
சமுதாயமே -நீ
செய்வது துரோகம் -அது
நீ குடித்த தாய்ப்பாலை
இழிவுப்படுத்துகிறது !
உன் மனைவியின் கற்பை
அசிங்கப்படுத்துகிறது ........
பெண்மை பேசும் ......!! மூச்சு உள்ளவரை ........!!!!

No comments:
Post a Comment