Search This Blog

Monday, August 22, 2011

எனக்கென்று எதையுமே உன்னிடம் கேட்கத்தோன்றவில்லை..............


இதுவரை ''வேண்டும்'' என்று எதையுமே கேட்க தோன்றவில்லை உன்னிடம்........................!
......நான் கேட்காமலேயே ....ஆயிரம்
பரிசுகளை அன்பினால் பொதி செய்து
வார்த்தைகளால் உறையிலிட்டு அனுப்பி வைத்தாய்
அதனாலோ என்னவோ..............?
எனக்கென்று எதையுமே உன்னிடம்
கேட்கத்தோன்றவில்லை..............
இப்போது கேட்கிறேன்.....................!
''எனக்கு உயிர் வேண்டும்''
உன்னுயிரையும் என்னுயிரையும்
கலந்து நமக்கென்று ஓர் உயிர்
வேண்டும்
உன்ன குறும்பும் என் சிரிப்பும்
இணைந்த ஓர் உருவம்
வேண்டும்
உன் வார்த்தையும் என் எழுத்தும்
சேர்ந்த ஓர் துடிப்புள்ள கவிதை
வேண்டும்
விரல்களை கொண்டு என் தேகத்தில்
நீ வரைந்த கோடுகளால் வாய்பேசும் சித்திரம்
வேண்டும்
உன்னுயிரை நான் சும ப்பதை விட
பெரிய பரிசு என்று இந்த உலகில்
எதுவுமே இல்லை
என் கவிதைகளை போலவே எனக்கும்
ஒரு குணம் உண்டு
எது கிடைக்காது என்று
தெரிகிறதோ அதைத்தான் வேண்டும்
என்று கேட்டு அடம்பிடிப்பேன்
இது கூட நிலவு கேட்டு அடம்பிடிக்கும்
குழந்தை போலத்தான்......
உன்னிடம் மட்டுமல்ல
இறைவனிடமும் எனக்கு மட்டும் என்று
எதையும் கேட்டதில்லை
இப்போது கேட்கிறேன்...
உன் நினைவுகளை சுமந்த து
போல.........
உன் காதலை நான் சுமந்த து
போல.........
உன் கண்ணீரை நான் சுமந்த து
போல.........
உன் கனவுகளை நான் சுமந்த து
போல.........
உன் உயிரையும் நானே சுமக்க
வேண்டும............................
என்னை நீ கவிதையாக்கியது போல
என்னை நீ குழந்தையாக்கியது போல
என்னை நீ நிலவாக்கியது போல
என்னை நீ தேவையாக்கியது போல
என்னை நீ பெண்ணாக்கியது போல
தாயாக்க வேண்டும்.................
உன்னை நான் காதலிப்பதைப்போல
யாரும் காதலித்திருக்க கூடாது
உனக்காக என் உயிரை தர
மாட்டேன்........................
வேண்டுமென்றால் தருகிறேன்
என்னைப்போன்ற இன்னோர் உயிரை..........

No comments:

Post a Comment