Search This Blog

Monday, August 22, 2011

உனக்கு நான்.......




ஒரு நொடி அன்பில் என்இதயத்தை
சிறைபிடிக்க-உன்னால்மட்டும்
எப்படி முடிந்தது....................?
நிசப்த இரவுகளில் நிலவின்ஒளியில்
நீயும் நானும் மட்டும்...கதைபேசி கரைந்த நிமிடங்கள்...................
பல வருடம் பார்த்துப்பழகியமுகங்களிடம்
தோன்றாத காதல்
சில நொடிகளில் அறிமுகமே இல்லாதஉன்னிடத்தில் தோன்றியது எப்படி........?
எனக்கு உயிர் கொடுத்தஉறவுகளை விட
நீ எனக்குஉயிரானது எப்படி..........?

புரியவில்லையடா...............!

ஓராயிரம் உறவுகள் அருகில்இருந்தும் ..
.காயப்பட்ட நிலவின்தனிமையில் நான்..
கண்களால் உனைப்பார்த்து காதலித்திருந்தால்
கண்ணீரோடு கரைந்து போயிருப்பாய்.....
உயிரால் உனைப்போர்த்தி
உள்ளத்தால் காதலித்ததால்
உலகத்தின் முடிவு வரை உயிர்த்திருப்பாய்
என்இதயத்துடிப்போடு கலந்து......

உனக்குள் ஒருத்தி இருந்திருக்கலாம்,
உன்னோடு ஒருத்தி வாழ்ந்திருக்கலாம்
உனக்காக ஒருத்தி பிறந்திருக்கலாம்
என்றாலும் உனக்குள் ஒருத்தியாய்
நான்இருப்பேன்...
உனக்கென்றுயாரும் இல்லாத போது

வானம் மறுத்தாலும் நிலவுகாய மறப்பதில்லை
காற்று தடுத்தாலும் பூக்கள்வாசம் வீச தவறுவதில்லை
நீயே வெறுத்தாலும்
உன்னைநினைப்பதை என் இதயம் நிறுத்துவதில்லை....
உனக்குத்தெரியுமா.....?
என் மூச்சுக்காற்றாக
நான் எழுதும் கவிதையாக
என் உடலின் உதிரமாக
என் விழியில் விம்பமாக
என் இரவுகளில் நிலவாக
என் கனவுகளில் காட்சியாக
என் கற்பனையின் ஊற்றாக
'நீ'
தான் இருக்கிறாய்
நீ தந்த முத்தங்களின் தித்திப்புசுவையாக...
நீ தந்த காயங்களின் வலிகள் சுமையாக...
நீ தந்த காதலின் கண்ணீர்சுகமாக....
என்றும்என்னுள்...
சில நேரங்களில் உன்னைக்கட்டியணைத்து
கண்ணீரில் கரைய வேண்டும்போல் இருக்கிறது
சில நேரம் உன்னை
முத்தங்களால் மூழ்கடித்து மடிய வேண்டும்போல் இருக்கிறது
சிலநேரம் சின்ன சின்ன சீண்டல்களில்
உன்னை திணறடித்து தீண்ட வேண்டும் போல் இருக்கிறது
அப்படி என்ன மாயம் செய்தாய்என்னிடம்.....?
உனக்கென்று கேட்டிருந்நால்
என் உயிரையே தந்திருப்பேன் என்னை கேட்காமல் என்
இதயத்தை ஏனடா திருடிக்கொண்டாய்.....?
இதயமே இல்லாமல் வாழ்ந்துவிடுகிறேன் நீயே என் இதயமானால் ......
என் அன்பின் ஆழம்அதிகரித்த இரவுகளில்
உன்னைக்கட்டிக்கொண்டு கண்ணீரில் நனைய வேண்டும்
போல்ஓர் உணர்வுஇப்போதெல்லாம் எனக்குநிஜங்கள் பிடிக்கவில்லை கனவுகள் மட்டுமே பிடிக்கிறது
என் இரவுகளின் இதய அலைவரிசையில்
ஒளிபரப்பாகியது ஏனோ உன் குரல் மட்டும் தான்..................
.நான் கேட்ட கவிதைகளை விடதித்திக்கிறது
உன் பேச்சு
நான் கவிதைகளை சுவாசிக்க தேவையில்லை
நீயே என் வசமானால்
என் நிஜங்களை நியாயமில்லாமல் திருடிக்கொண்டு
என்னை கனவிலே புலம்ப வைக்கும் உனக்குஇரக்கமே இல்லையா................?
என் இதய ஊருக்குள் உலக அழகன் 
'நீ'
உன் காதல் தேசத்துக்குள் குறும்பு தேவதை
'நான்'
பூவாக பிறந்திருந்தால்வாசமாகவாவது
உன்னை வந்துசேர்ந்திருப்பேன்......
மழைத்துழியாக உயிர்த்திருந்தால்,
உன் மேல் வந்து விழுந்திருப்பேன்
விண்மீனாக சிதறியிருந்தால்,தூரத்திலிருந்து
உன்னை கண்ண சிமிட்டி ரசித்திருப்பேன்....
.தென்றலாக மாறியிருந்தால் தினந்தோரும் உன் தேகத்தைவருடியிருப்பேன்................
என்ன செய்ய.......?
நான் பிறந்து விட்டேன்தூர தேசத்து நிலவாக
துரத்தித் துரத்தி காதலித்தாலும்
உனக்கு நான் தூரத்து உறவுதான்
கற்பனையில் மட்டுமேகரம் பிடித்த என்னை
தேடிப்பார் நிஜத்தில்ல எட்டா தூரத்தில்வாழ்ந்திருப்பேன்..........
.கனவில் மட்டுமே வந்து போகும் என்னை...
உணர்ந்து பார்காட்சி தர மறுத்து போய்க்கொண்டே இருப்பேன் புரிகிறதா.....?
நான் உன் கனவுதேசத்துக்கு மட்டுமே
''காதலி''
உன் இரவுகளில் மட்டுமே வந்து போகும்
''தேயா நிலவு'
'கற்பனையில் மட்டுமே கரம்ம பிடித்த
''தேவதை'
'நான் உன் இதயறைக்கு மட்டுமே
''இளவரசி''
நீ எனக்கு தோழனாய்
தாயாய்
காதலனாய்
தந்தையாய் இருக்கிறாய்
நான் உனக்கு
கனவாய்
கற்பனையாய்
காவியமாய்
கற்பனையாய் இருக்கிறேன்
உயிருள்ள வரை என் பேனை
உனக்காக மட்டுமேஎழுத வேண்டும்.....
உன்னோடு மட்டுமே என்கவிதைகள் பேச வேண்டும்.......நீ
நினைத்துப்பார்க்கும் தூரத்தில் இல்லாத நான்
திரும்பிப்பார் உன்நிழலாய் இருக்கி

No comments:

Post a Comment