Search This Blog

Monday, August 22, 2011



என் கவிதைக்கு
ஒரு குணம் உண்டு
எல்லாவற்றையும்
எளிமையாக
வெளிப்படுத்தும்
உன்னை மட்டும்
வலிமையாக வெளிப்படுத்தும்................

எதுவுமே தெரியாமல்
உன்னை காதலித்தேன்
ஏனென்றால் தெரியாமல்
வருவதுதான் காதல்.........

உன்னை விட அழகான
ஆண்கள் எல்லாம் என்
வாழ்வை கடந்து போகிறார்கள்
உன்னைவிடவும் அக்கறையோடு
சிலர் என்னை நேசிக்கிறார்கள்.......
இருந்தும் உன்னை மட்டுமே
நினைக்கும் படியாய்
என்ன
செய்தாய் என்னை?
நிலவாகப் பிறந்திருந்தால்
மேகத்திலாவது உன்னை
மறைத்து வைத்திருப்பேன்....
பெண்ணாக பிறந்த்தால்
எனக்கான எதையும்
மறைக்க முடியவில்லை ................
உன் மீது உள்ள காதலை
சொல்லத்தெரியாமல்
சொல்லி விட்டதைப்
போல .........

எனக்கென
ஏதோ ஒன்று
உன்னிடம் மட்டுமே
இருப்பதாகத்
தோன்றுகிறது...........
அதைக் கேட்டு உன்னை
காயப்படுத்த விருப்பமில்லை
கேட்காமல் இருக்கவும்
முடியவில்லை.........
நீயே சொல்
என்ன அது?

இது பொய் அல்ல
நீ தான் எனக்கு
முதல் காதலன்
முதல் காதல்..யாரிடமும்
தோன்றவில்லை இதுபோல்.......
நிலவையே வசப்படுத்தி
கண்களுக்குள் வைத்திருந்தேன்
உன் நினைவுகளையே சுமக்கும்
படியாய் என்ன செய்தாய்?......
நான் என்ன செய்ய
மறக்க நினைத்து தான்
உன்னை காதலிக்க கற்றுக்கொண்டேன்
மறக்கவா? நினைக்கவா?.....
நீயே சொல்?

உன்னை மறந்தாலும்
நினைத்தாலும்-இறுதியில் கண்ணீரும்
தனிமையும் தான் எனது
சொந்தங்கள்......
எனக்குத்தெரியும்- நீயும்
என்னை காதலிக்கிறாய்....
அதை சொல்லி விடு
நான் இன்னொருவனின்
கைகளில் சேரும் முன்னர்.........
நீ எனக்கு தந்த
முத்தம்
காதல்
மகிழ்ச்சி
வெட்கம்
dகனவு
வலி
எதையுமே என்
இதயம் மறக்கப்போவதில்லை
உன் சுகமான நினைவுகள்
என் மரணப்படுக்கையிலும்
உன்னை ஞாபகப்படுத்தும்......

- உன்னவள்-

No comments:

Post a Comment