அந்த நாட்களின் ஞாபகத்தடங்கள்
மட்டும் என்றும் அழியாமல் என்னிடம்............................
வாழ்வில் சோகங்களை நான்
சந்தித்தது குறைவுதான்...............உன்னை
காதலிக்கும் வரை......... (ஒருதலையாக)
என் தந்தையை விட எந்த
ஆணையும் அதிகம் நேசித்ததில்லை
உன்னை சந்திக்கும் வரை .....................
வார்த்தையால் என் காதலை
சொன்னேன்........வார்த்தைகள்
வாழ்விழந்தது உன்னிடம்......நினைக்கவில்லை
இறுதியில் என் எழுத்துக்களும்
வலிமை இழந்துவிடும் என்று................
இனியும் அந்த ஒரு வார்த்தைக்காக
உன் இதயத்திடம் போர் புரிய
விருப்பமில்லை.........நீ
சொல்ல மறுத்த (மறந்த) அந்த
வார்த்தையை இனி
நான் எப்போதும் உன்னிடம்
கேட்கப்போவதில்லை..........அது
உன்னிடமே இருக்கட்டும் பத்திரமாக............
பிழைகள் உன்னிடம் தான்
காதலிக்க கற்றுத்தந்த-நீ
மறக்க கற்றுத்தரவில்லை
வெட்கப்பட கற்றுத்தந்த-நீ
வெறுக்க கற்றுத்தரவில்லை
நினைவிருந்தால் கேட்டுப்பார்,
உறங்க மறந்த என் இரவுகளிடம்....
உன் நினைவுகளில் மட்டுமே
துடித்த என் இதயத்திடம்.........
உன்னோடு பேசி கரைந்து போன
அந்த நிமிடங்களிடம்..........
உன் பெயரை உச்சரித்து அழகு
பார்த்த என் கரடி பொம்மைகளிடம்
என் காதலை கதை கதையாகச்சொல்லும்.......
சொன்னார்கள்,
கிடைக்காத பொருளின் மேல் ஆசை
வைப்பது முட்டாள்த்தனம் என்று
நான் ஆசை வைத்ததே -அந்த
பொருள்(நீ) கிடைக்காது என்று
தெரிந்த பிறகுதான்.........
நிலவே இல்லாத ஒரு இரவில்
முழு நிலவைக்கேட்டு அடம்பிடிக்கும்
குழந்தைபோல...........
என் நினைவே இல்லாத உன் இதயத்திடம்
காதலைக்கேட்டு அடம்பிடிக்கிறேன்...
முட்டாள்தனம் தான்-என்ன செய்ய?
முடியவில்லை............உன்னை
சுவாசிக்காமல் வாழ....
இப்போதெல்லாம் என்னை
அடிக்கடி ஞாபகப்படுத்த-நான்
விரும்புவதில்லை.......
என் ஞாபகம் உனக்கு
சுமையாகி விடக்கூடாது
எனபதற்காக.......இருந்தும்
காயப்படுத்தி இருக்கலாம்......
மன்னித்து விடு உயிரே
உனக்குள் என்னை
தேட நினைத்தமைக்கு...........!

No comments:
Post a Comment